கொரோனா பரவல் பற்றி கவலைப்பட வேண்டாம் - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.! - Seithipunal
Seithipunal


நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து 115 அடி உயரம் கொண்ட 500-வது மூவர்ணக் கொடியை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், "கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றும், தற்போது வரும் கொரோனா தொற்று லேசானவையாக இருப்பதால் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இலவசக் கல்வி, இலவச சிகிச்சை அளிப்பது இலவசம் அல்ல.. அது அரசின் கடமை. ரூ. 10,000 கோடி கடன்களைத் தள்ளுபடி செய்வதும், வரிகளைத் தள்ளுபடி செய்வதும் தான் இலவசம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கோவாவில் தேர்தல் ஆணையத்திடமிருந்து தனது கட்சிக்கு மாநில அந்தஸ்து கிடைத்துள்ளதாகவும், டெல்லி மற்றும் பஞ்சாபைத் தொடர்ந்து தற்போது கோவாவிலும் ஆம் ஆத்மி‌ மாநில அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ளது என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dont worry about the spread of Corona Delhi Chief Minister Arvind Kejriwal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->