மறக்காதீங்க... சின்னம் விசில்...! தீயசக்திக்கு முற்றுப்புள்ளி வைக்க இதுவே நேரம்...! - விஜய்யின் நேரடி அட்டாக்
Dont forget symbol whistle This time put end evil Vijay direct attack
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கை, அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது இதயத்தில் இடம்பிடித்த மக்களை “என் சொந்தங்கள்” என அழைத்து தொடங்கும் இந்த உரை, உணர்ச்சியும் உறுதியும் கலந்த அரசியல் அறிவிப்பாக உருவெடுத்துள்ளது.“எனக்கு எல்லாவற்றையும் தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு என் வாழ்நாள் நன்றிக்கடன் உள்ளது.

அந்தக் கடனை செலுத்தவே அரசியலுக்கு வந்தேன். இந்தப் பயணத்தில் நான் சந்தித்த அழுத்தங்கள், நிர்பந்தங்கள், வேதனைகள் சொல்லிக்கூற முடியாதவை. ஆனால் அவற்றை எல்லாம் தாங்கி நிற்க வைக்கும் சக்தி, உங்களின் அளவற்ற அன்பும் ஆதரவும் தான்” என்று விஜய் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “மக்கள் விரோத சக்திகளாக செயல்படும் கட்சிகள் மற்றும் பிளவுகளை உருவாக்கும் அரசியல் அணிகள், எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும், இந்த விஜய் எப்போதும் பணிய மாட்டான். ஆதாயங்களால் அடக்கவும் முடியாது, அதிகாரங்களால் மிரட்டவும் முடியாது. மக்களின் நம்பிக்கையே எனது பலம்” என அவர் தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
“பெண்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரின் பேராதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் முதன்மை அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறது. இந்த எழுச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. வரவிருக்கும் தேர்தலில் மக்கள் தங்களது தீர்ப்பால் இதை நிரூபிப்பார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நம்மை எள்ளி நகைத்தவர்கள் கூட விரைவில் உண்மையை உணர்வார்கள். நேர்மை, சமூகநீதி மற்றும் ஜனநாயகத்தின் அடையாளமாக திகழும் த.வெ.கவை எந்த ஊழல் அல்லது பாசிச சக்திகளாலும் வீழ்த்த முடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, “ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவில், எந்த வித குழப்பமும் இன்றி ‘விசில்’ சின்னத்துக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். பணமழை பொழிந்தாலும் அதில் மயங்காமல், குடும்பம் குடும்பமாக திருவிழா போல வாக்களிக்க வாருங்கள். வெற்றி நிச்சயம், நாம் வரலாறு படைக்கப் போகிறோம்” என மக்களிடம் உணர்ச்சி பூர்வமான வேண்டுகோளை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Dont forget symbol whistle This time put end evil Vijay direct attack