"நாய்களுக்கு உணவளிக்க கூடாது, எம்பி விஜய் கோயல்! - Seithipunal
Seithipunal


வடக்கு டெல்லியில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வரும் இவர் டெல்லியில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த வாரம் தெரு நாய்களுக்கு உணவளிக்கும் பிரச்சினைகள் குறித்து டெல்லியின் வடக்கு டவுன் மாடல் பூங்காவில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இதில் பங்கு பெற்று தலைமை வகித்த விஜய் கோயல் தெரு நாய்களுக்கு உணவளிக்கக் கூடாது என்று கூறியதுடன் அங்கு வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பெண்களின் செல்போன்களை பிடுங்கி வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெரு நாய்களுக்கு உணவளிப்பதால் மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று விஜய் கோயல் அக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் பேசிய போது வீடியோ எடுத்த பெண்ணின் செல்போனை பிடுங்கிய விவகாரம் சமூக வலைத்தளத்தில் அந்த பெண்ணை கன்னத்தில் அறைந்துவிட்டதாக சித்தரிக்கப்பட்டு பரவி இருக்கிறது. இதற்கு விஜய் கோயல் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் கோயல் இந்நிகழ்வு பற்றி கூறியதாவது; தெரு நாய்களுக்கு உணவளிப்பது குறித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டேன் .நான் பேசிய போது பெண் ஒருவர் வீடியோ எடுத்தார். வீடியோ எடுக்க வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தேன் ,அவ்வளவுதான். ஆனால் அவரை நான் கன்னத்தில் அறைந்து விட்டதாக சிலர் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர் இவ்வாறு அவர் கூறினார்.

தெரு நாய்களுக்கு உணவளிக்கக் கூடாது வேண்டுமென்றால் நாய்களை அவர்களின் வீட்டுக்கு வந்து உணவு அருந்த சொல்லுங்கள் .இவ்வாறெல்லாம் விஜய் கோயல் பேசியதாக அவர் மீது போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Don't Feed Street Dogs Says Bjp MP Vijay Koyal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->