கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை முதல்வரே திறக்க முடிவு! குடியரசு தலைவர் வருகை என்ன ஆச்சு?! - Seithipunal
Seithipunal


கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை திறக்க குடியரசு தலைவர் நேரம் ஒதுக்காததால், முதல்வரே திறக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னையில் அமைந்துள்ள கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில், ரூ.230 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.அதன் கட்டுமான பணிகளுக்கு, கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்த மருத்துவமனையில், இதயம், நுரையீல்,நரம்பியல், சிறுநீரகவியல், புற்றுநோய் உள்ளிட்ட பிரிவுகளுக்கு, ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏ - பிளாக்கில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு, பி - பிளாக்கில் அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, சி - பிளாக்கில் கதிரியக்க சிகிச்சை பிரிவு போன்ற பல்வேறுபட்ட சிகிச்சைகளுக்கான இடங்கள் சிறப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனைக்கு கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை’ என பெயரிடப்பட்டுள்ளது. ஜூன் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தத நிலையில், இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு, அனைவரையும் வரவேற்பதற்கான கலை நிகழ்ச்சிகள் ஆகியவை ஏற்பாடு செய்யும் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. குடியரசு தலைவர் இதுவரை நேரம் எதுவும் ஒதுக்கவில்லை , ஒதுக்கப்பட்ட தேதி அன்று வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில், வருகின்ற 15-ம் தேதி கண்டிப்பாக மருத்துவமனை திறப்பு விழா நடைபெறும். அது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கைகளால் திறந்து வைக்கப்படும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிப்படை தொடங்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Does TN Cheif Minister opens Kalainjar centenary Hospital


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->