பரபரப்பான சூழலில் திமுக அடுத்தடுத்து எடுத்த முடிவுகள்! ஒத்திவைக்கப்பட்ட முக்கிய நிகழ்வுகள்!  - Seithipunal
Seithipunal


தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக பொதுக்குழு மற்றும் மாநில மாநாடுகளை ஒத்திவைப்பதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஓரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. மார்ச் மாதம் 12-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 19-ந்தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

நாட்கள் குறைவாக இருப்பதால் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, திமுக பொதுக்குழு மற்றும் திருச்சி மாநில மாநாடு ஆகியவற்றை ஒத்திவைத்துள்ளது. மேலும், தொகுதி பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர். பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் கே.என். நேரு, பெரியசாமி, பொன்முடி, ஆர்.எஸ். பாரதி, எ.வ. வேலு, சுப்புலெட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Trichy Meeting Postponed Announce by DMK Secretary Durai Murugan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal