திமுகவின் திருட்டு தனத்தின் உச்சம்.! திருப்பி அடித்த சிஎஸ்கே வீரர்.! சந்தி சிரிக்கும் ஸ்டாலின் மானம்.! - Seithipunal
Seithipunal


பாமகவின் அருள் ரத்தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சிஎஸ்கே மற்றும் டெல்லி இடையிலான IPL போட்டியில் மொயின் அலியின் ஜெர்சியில், திமுக சாரய விளம்பரமான SNJ 10000 லோகோ இடம்பெறவில்லை.

பின்னணி என்ன?

அப்பாவி இளைஞர்களை சாராய அடிமைகளாக்கும் நோக்கில் கிரிக்கெட் போட்டிகள் மூலம் திட்டமிட்டு சாராயம் திணிக்கப்படுகிறது. இந்த படுபாதக செயலை திமுக கும்பல் அப்பட்டமாக செய்துவருகிறது. 

இந்நிலையில், 2021 ஐபிஎல் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை அந்த அணி நிர்வாகம் வெளியிட்டது, அதில் திமுக சாரய கம்பெனியின் 'எஸ்என்ஜே 10000' பீர் லோகோ இடம் பெற்றிருந்தது.

ரூ. 7 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சென்னை அணி வீரர் மொயின் அலி, திமுக கும்பலின் எஸ்என்ஜே 10000 பீர் மதுபான லோகோவை அணிய மறுத்ததாக செய்திகள் கூறின!

திமுக கும்பலின் திட்டமிட்ட சாராய திணிப்பால் சர்வதேச அளவில் தமிழ்நாட்டின் மானம் கப்பலேறியது!

திமுக மறுப்பும், மொயின் அலியின் செருப்படியும்

இதனால் பதற்றமடைந்த திமுக கும்பல், சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் மூலமாக, இந்த செய்தியை மறுத்தது.

திமுக ஆதரவு, Factchecking செய்தித்தளம் You Turn மூலம், மூலம், இது தவறான செய்தி (Fake) என்றும் வெளியிட செய்தனர்.

ஆனால், 10.4.2021 அன்று மும்பையில் நடைபெற்ற 'சிஎஸ்கே மற்றும் டெல்லி' இடையிலான IPL போட்டியில் மொயின் அலியின் ஜெர்சியில், திமுக சாராய பீர் விளம்பரமான SNJ 10000  லோகோ இடம்பெறவில்லை.

அதாவது, திமுக கும்பலின் SNJ சாராய விளம்பரத்தை அணிய மொயின் அலி மறுத்தார் என்பது, உண்மைதான் என வெளிப்படையாக அம்பலமானது.

எஸ்என்ஜே 10000 பீர்: திமுகவின் மதுபானம்

திமுக தலைவர் கருணாநிதி கதை, வசனம் எழுதிய உளியின் ஓசை, பெண் சிங்கம் ஆகிய திரைப்படங்களை தயாரித்த எஸ்.என்.ஜெயமுருகன் என்பவரின் எஸ்என்ஜே டிஸ்டிரில்லரீஸ் சாராய நிறுவனத்துக்கு 2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்தான் உரிமம் வழங்கப்பட்டது.   

இந்த நிறுவனம் தயாரிக்கும் பலவித மதுபானங்களில் எஸ்என்ஜே 10000 பீர் என்பதும் ஒன்று. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மூலம் இந்த நிறுவனத்தின் மதுபானங்கள் ஆண்டுதோரும் விளம்பரம் செய்யப்படுகின்றன.

(இது திமுக குடும்பத்தினர் பினாமி கம்பெனி என்று கருதப்படுகிறது. அண்மையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு தனியார் நிறுவனங்களுடன் உள்ள தொடர்பு குறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில் எஸ்.என்.ஜே சாராய நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களும் அடங்கும்.)

யார் வீட்டில் எழவு விழுந்தால் திமுகவுக்கு என்ன?

தமிழ்நாட்டின் பெரும்பாலான சாராய ஆலைகளை திமுகவினரே நடத்துகிறார்கள். எஸ்என்ஜே டிஸ்டிரில்லரீஸ், எலைட் டிஸ்டல்லரீஸ், கோல்டன் வாட்ஸ், AM Breweries, Kals distilleries ஆகிய மிகப்பெரிய சாராய கம்பெனிகள் திமுகவினர் நடத்துபவை என்று செய்திகள் கூறுகின்றன.

இவற்றின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. யார் வீட்டில் எழவு விழுந்தால் என்ன? எத்தனை பெண்கள் தாலி அறுத்தால் என்ன? எங்களுக்கு தேவை பணம் மட்டுமே என்பது தான் திமுகவின் சாராயக் கொள்கை.

குறிப்பு: International Fact Checking Network (IFCN) - இல் ஒரு அங்கமாக உள்ள You Turn செய்தித்தளம், உண்மையையே தவறான செய்தி (Fake) என்று வெளியிட்டது வெட்கக் கேடான செயல் ஆகும்.  IFCN அமைப்பின் A commitment to Non-partisanship and Fairness விதியை மீறி திமுக ஆதரவு கும்பலாக இந்த செய்தித்தளம் இயங்குகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk split fake news legally


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->