திமுக மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ஸ்டாலின்! உட்கட்சி பிரச்சனை, தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் இன்று திமுக தலைமை கழகமான அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல், கூட்டணி திட்டம் குறித்து விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைப்பது குறித்தான ஆலோசனையும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோன்று பல மாவட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. தமிழக அமைச்சர்களுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் இடையே அரசு பணி ஒப்பந்தம் தொடர்பாக பனிப்போர் நிலவி வருகிறது. இந்த விவகாரங்கள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகள் எடுப்பார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் சமீப காலமாக திமுக கூட்டணி குறித்தும் அரசின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்தும் மாவட்டச் செயலாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் விவாதிக்க உள்ளார். நேற்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி "காங்கிரஸ் இல்லாமல் திமுக வெற்றி பெறாது" என கூறிய கருத்தும் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தை அனைத்து அரசியல் கட்சிகளாலும் உற்று நோக்குகின்றன. இந்தக் கூட்டம் அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK President Stalin convened meeting of district secretaries


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->