முக ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த திமுக எம்எல்ஏக்கள்.! சட்டப்பேரவையில் நடந்த சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போதிய இடவசதி இல்லாததால் சென்னை கோட்டையில் நடைபெற வேண்டிய சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. 

கலைவாணர் அச்சுறுத்தலால் மூன்று நாட்களும் மட்டும் சட்டப்பேரவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இரண்டு நாள் முடிவடைந்துவிட்டது, இன்று இறுதி நாள் என்பதால் காரசாரமான விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேற்று தொடங்கிய சட்டப் பேரவைக் கூட்டத்திற்கு திமுக எம்எல்ஏக்கள் நீட் தேர்வுக்கு எதிராக வாசங்கள் அடங்கிய முக கவசம் அணிந்து கொண்டு சட்டப் பேரவை கோட்டத்தில் கலந்துகொண்டனர். திமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் கு.க. செல்வதற்கு திமுக எம்எல்ஏக்கள் மத்தியில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. 

திமுக எம்எல்ஏக்கள் மத்தியில் அவருக்கு ஒதுக்கப்பட்ட 228 நம்பர் இருக்கையில் அமர கு.க. செல்வம் சென்றபோது, அவரை வாங்க என்று சிரித்தபடி திமுக எம்எல்ஏக்கள் வரவேற்றனர். வந்துவிட்டேன் என அவரும் சிரித்தபடியே பதில் சொல்லிவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார். இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk mlas welcome to ku ka selvam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->