முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீனில் விடுதலை..!
DMK MLA Markandeyan released on bail
முதல்வர் விஜய் குறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் அவதூறாக பேசிய வழக்கில் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறை அடைக்கப்பட்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்த நிலையில், இன்று விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த ஜூலை 18-ஆம் தேதி, கோவில்பட்டியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசியிருந்தார். கானை தொடர்ந்து தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஜூலை 20-ஆம் தேதி கைது செய்தனர். அதையடுத்து நீதிமன்ற காவலில் அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் மார்க்கண்டேயன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.
இதற்கிடையில், அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியிருந்தது. இன்று நீதிமன்ற உத்தரவு நகல் கிடைக்கப் பெற்றதை அடுத்து, பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து மார்க்கண்டேயன் விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த அவருக்கு திமுகவினரும், அவரது ஆதரவாளர்களும் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
English Summary
DMK MLA Markandeyan released on bail