பட்டியல் சமூகத்தவருக்கு கழிவுநீர் அகற்றும் வாகனம்! தூய்மைப் பணி என்ன குலத்தொழிலா…? அம்பேத்கர் பெயரில் கேடுகெட்ட அரசியல் - வலுக்கும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றிட "அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட"த்தின் கீழ் 213 நபர்களுக்கு நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திக்கான கடன் உதவி வழங்க வழங்கப்பட்டு, இன்று 213 நபர்களுக்கு நவீன கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இது குறித்த விளம்பரம் நாளிதழ்களில் வெளியாகி இருந்தது. இதற்க்கு அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

பாமகவை சேர்ந்த வினோபா : "தூய்மைப் பணி என்ன குலத்தொழிலா…? ஏன் அவர்கள் ஏனைய தொழில்கள் எதுவும் செய்யக்கூடாதா? 
அவர்கள் கழிவு நீர் அகற்றுவதில் மட்டும்தான் தொழில் முனைவோர்களாக ஆக வேண்டுமா? 

உங்களுக்கு அரசியல் தொழில்…
அவர்கள் கடைசிவரை தூய்மைப்பணி தொழிலா? 
கேடுகெட்ட அரசியல்…. #ModernManuStalin

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில், பட்டியல் சமூகத்தவருக்கு கழிவுநீர் அகற்றும் வாகனம் வழங்கும் விழாவை ஒரு அரசே நடத்துவது சமூகத்தில் என்னமாதிரியான உளவியல் போக்கை உருவாக்கும்? அண்ணல் அம்பேத்கரின் சமூகத்தவர்கள் கழிவு அகற்றத்தான் தகுதியானவர்கள் என்று கூறுகிறதா திமுக அரசு?  இந்த அவலத்தைத்தான்  சமூக நீதி அரசியலில் சேர்க்கிறார்கள் ஸ்டாலின்  மாடல் அறிவாளிகள். மானக்கேடு!

அதிமுக நிர்வாகி நிர்மல் : அம்பேத்கர் நினைவு நாளில் கழிவுநீர் வாகனங்களை வழங்கி தான் கொண்டாட வேண்டுமா, ஏன் சட்டக் கல்லூரி திறப்பது போன்ற நிகழ்சிகள் வைத்தால் பொருந்தாதா முக ஸ்டாலின்?

கடந்த டிசம்பர் மாதமே இதற்க்கு கண்டனம் தெரிவித்த காங்கிரசை சேர்ந்த பிரகாஷ் : அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்" 213 பேருக்கு கழிவுநீர் அகற்றும் ஊர்தி கடனுதவி!!!! இதான் இவனுங்க... குலத்தொழில் ஊக்குவிப்பு பண்றானுங்க இதுக்கும் பாஜகவின் குலக்கல்வி திட்டத்துக்கும் எதும் வித்தியாசம் இருக்கா???


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MK Stalin Govt ADMK PMK Congress


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->