மாமன்னன் பட பாணியில் பொன்முடி? கட்டுபோட்டதால் குனிந்தார் - புதுவிளக்கம்! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் பொன்முடி வீட்டில், மாமன்னன் படத்தில் நடந்தது போலவே திமுகவினர் நடத்தப்பட்டனரா? என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருகின்ற 1 ஆம் தேதி விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில், மாநில ஆதிதிராவிடர் நல அணியும், சிறுபான்மையினர் அணியும் இணைந்து பட்டிமன்றம் ஒன்றை நடத்த உள்ளனர்.

இதற்கான ஆலோசனைகளை பெறுவதற்காக ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் ராஜன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், திமுக அமைச்சர் பொன்மொழியின் வீட்டிற்கு அண்மையில் சென்று உள்ளனர்.

அப்போது திமுக அமைச்சர் பொன்முடி சொகுசான இருக்கையில் அமர்ந்து கொண்டு, திமுக நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏ-வை நிற்க வைத்து பேசுவது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியாகியது.

 

இந்த புகைப்படத்தை பார்த்த சமூக தலைவாசிகள், அமைச்சர் பொன்மொடிக்கு அருகிலேயே காலியான சொகுசு இருக்கைகள் இருக்கும்போது, திமுக நிர்வாகிகளை அமர வைத்து பேசியிருக்கலாமே? இதுதான் திமுகவின் சமூக நீதியா? மாமன்னன் படத்தில் வந்த காட்சியைப் போல தானே அமைச்சரும் நடந்து கொண்டுள்ளார்? என்று சமூக வலைத்தள வாசிகள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தனர்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், கடந்த 26 ஆம் தேதி நானும், விபி ராஜனும் அமைச்சரை சந்திக்க அவரின் வீட்டுக்கு சென்றோம்.

அப்போது அமைச்சரின் காலில் காயமடைந்து கட்டுப்போட்டு அமர்ந்திருந்தார். இதனைப் பார்த்த விபி ராஜன் சற்று குனிந்து அமைச்சரின் காலை பார்த்தபடி நலன் விசாரித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நாங்கள் அமைச்சரின் வீட்டில் உணவு அருந்திவிட்டு தான் வந்தோம். சில விஷயங்களில் உண்மையை தெரிந்து கொள்ளாமல் மேம்போக்காக சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பது தவறு. இந்த விவகாரம் குறித்து என்னிடம் இதற்கு மேல் விளக்கம் கேட்க வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister like Maamannan movie scene issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->