துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி.. உறுதியாக சொல்லும் திமுக அமைச்சர்கள்..!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என மூத்த அமைச்சர்களும் திமுக கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் அமைச்சராக உதயநிதிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அமைச்சர் உதயநிதிக்கு சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தன. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்த நிலையில் அமைச்சர் சாமிநாதனும் அதனை முன்மொழிந்தார்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர் சேகர்பாபு தொடங்கிய வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர் "உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக வேண்டும் என அமைச்சர்கள் சாமிநாதன், அன்பில் மகேஷ் போன்றோர் முன்மொழிந்திருந்தால் அதனை நான் வழிமொழிந்து இருப்பேன்" என பேசியுள்ளார். இதன் மூலம் கூடிய விரைவில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dmk Minidters said Udhayanidhi becomes deputy cm


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->