விஜய் ப்ரோ..வாட் ப்ரோ.. அடக்கி வாசிங்க ப்ரோ.. திமுகவினர் விஜய்யை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டர்! தமிழக அரசியலில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மீது, திமுக இளைஞரணி சார்பில் கண்டனப் போஸ்டர்கள் மதுரையில் ஒட்டப்பட்டுள்ளன. "வாட் ப்ரோ.. ஓவர் ப்ரோ.. அடக்கி வாசிங்க ப்ரோ" என்ற வாசகங்களுடன் வந்துள்ள இந்தப் போஸ்டர், தவெக தொண்டர்களின் கடும் எதிர்ப்பையும், சமூக வலைதளங்களில் இரு தரப்பினருக்கும் இடையிலான மோதலையும் தூண்டியுள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டில், விஜய் உரையாற்றியிருந்தார். அப்போது அவர், முதல்வர் ஸ்டாலினை "அங்கிள்" என்று பலமுறை குறிப்பிட்டதோடு, அவரின் ஆட்சியை நேரடியாகக் குறிவைத்து கடுமையாக விமர்சித்தார்.

விஜய் அப்போது,"ஒருவர் தவறு செய்தால், அவர் யார் என்றாலும் சொல்ல வேண்டும். அது கபட நாடக மு.க. ஸ்டாலின் அங்கிள் இருந்தாலும்… அங்கிள், உங்களுக்கு மனசாட்சி இருந்தால், நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க. உங்கள் ஆட்சியில் ஊழல் இல்லையா? பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறதா?

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடக்கிறது என்று சொல்கிறார்கள். பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டால் போதுமா? பெண்கள் பாதுகாப்பில்லாமல் கதறுகிறார்கள். அந்தக் கதறல் சத்தம் உங்கள் காதுகளில் கேட்கவில்லையா அங்கிள்? இன்னும் வேற உங்களை அப்பா என்று அழைக்க சொல்லுறீங்களா? வாட் இஸ் திஸ் அங்கிள்? இட்ஸ் வெரி வெரி ராங் அங்கிள்,” என்று கடுமையாக தாக்கினார்.

இந்தக் கருத்துகள் திமுக வட்டாரங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தின. குறிப்பாக, முதல்வரை "அங்கிள்" எனக் குறிப்பிடும் முறையே அவமதிப்பாக உள்ளது என திமுகவினர் கருத்து தெரிவித்தனர்.

இதன் பின்னணியில், மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில்,
"வாட் ப்ரோ.. ஓவர் ப்ரோ.. அடக்கி வாசிங்க ப்ரோ"
என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், திமுக இளைஞரணி நிர்வாகிகள் இதனை சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதேவேளையில், தவெக தொண்டர்கள் இதற்கு எதிராக கொந்தளித்து, சமூக வலைதளங்களில் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதன் விளைவாக, திமுக – தவெக தொண்டர்களுக்கிடையில் வார்த்தை மோதல் அதிகரித்து வருவதாகவும், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசியல் சூடுபிடித்துள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK members put up a poster criticizing Vijay There is a stir in Tamil Nadu politics


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->