தி.மு.க. தமிழர்களை சிறுமைப்படுத்துகிறது...! - வானதி சீனிவாசன் கடும் குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றிக்காக பா.ஜ.க. சிறப்பு பூஜை நடத்தியது.
துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக நிற்பவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி, கோவை பா.ஜ.க சார்பில் புலியகுளம் முன்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் மாநகர் தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் நடந்த விழாவில், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பங்கேற்றுக்கொண்டு உரைத்ததாவது,"தமிழரான ராதாகிருஷ்ணன் நிச்சயமாக துணை குடியரசுத் தலைவராக பதவி ஏற்கப்போகிறார். கோவையில் மட்டும் 25 கோவில்களில் பூஜை நடைபெறுகிறது.

ஆனால் தி.மு.க தமிழருக்கே ஆதரவு தராமல், தமிழர்களை சிறுமைப்படுத்துகிறது,” எனக் குற்றம்சாட்டினார்.மேலும் அவர் தெரிவித்ததாவது,"அ.தி.மு.க.வில் உள்ள பிரச்சனைகள் கூட்டணியின் வெற்றியை பாதிக்காது.

2026 தேர்தலில் தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்புவது எங்கள் இலக்கு" என்றும் அவர் தெரிவித்தார்.அதுமட்டுமின்றி,இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK is belittling Tamils Vanathi Srinivasan makes strong allegations


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->