"குழந்தைக்குக் கூட பாதுகாப்பில்லை": திமுக நிர்வாகி கைதும் டிடிவி தினகரன் ஆவேசமும்!
DMK Govt Must Go TTV Dhinakaran Slams Govt Over Child Murder Case
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே இரண்டரை வயதுக் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிடிவி தினகரன் வெளியிட்ட கடும் கண்டனம்:
இந்தச் சம்பவம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் (X) தளத்தில் திமுக அரசைச் சாடிப் பதிவிட்டுள்ளார்:
பாதுகாப்பற்ற தமிழகம்: தமிழகம் இன்று பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்குமே பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிவிட்டது. பெண்களின் பாதுகாப்பிற்காகப் பல கோடி ரூபாய் செலவில் விளம்பரம் செய்வது வெட்கக்கேடானது என அவர் விமர்சித்துள்ளார்.
அலட்சியமே காரணம்: கஞ்சா விற்பனை, கள்ளச்சாராயம் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் திமுக நிர்வாகிகளை அரசு கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவே, இத்தகைய குரூரக் குற்றங்கள் அரங்கேறக் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரே தீர்வு தேர்தல்:
"பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் இந்தக் கொடூரத்தைச் செய்த நபருக்கு உச்சபட்சத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்திய தினகரன், தமிழக மக்கள் நிம்மதியாக வாழ வரும் தேர்தலில் திமுக-வை வீட்டிற்கு அனுப்புவதே ஒரே தீர்வு என்றும் பதிவிட்டுள்ளார்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவரே இத்தகைய குற்றச்சாட்டில் கைதாகியிருப்பது, சட்டம் ஒழுங்கு குறித்த விவாதங்களை மீண்டும் ஒருமுறை வீரியமாகியுள்ளது.
English Summary
DMK Govt Must Go TTV Dhinakaran Slams Govt Over Child Murder Case