திமுக சின்ன தோசை தான் கொடுத்தார்கள்! அப்செட்டில் ராகுல் காந்தி? பிரவீன் சக்கரவர்த்தி பேச்சால் திமுக கூட்டணியில் சலசப்பு!
DMK gave them a small dosa Rahul Gandhi in an upset Praveen Chakravarthy speech creates a stir in the DMK alliance
தமிழக சட்டமன்றத் தேர்தல் சூடு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்ட கருத்து திமுக கூட்டணிக்குள் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த நேரத்தில் வெளியான இந்த அறிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி இன்னும் தமிழகத்தில் பிரச்சாரத்திற்கு தேதி ஒதுக்காத சூழலில், இந்த கருத்து வெளியானது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. தனது அறிக்கையில் காங்கிரஸ் கட்சியை அனுமனுடன் ஒப்பிட்டுப் பேசிய பிரவீன் சக்கரவர்த்தி, “எங்களுடைய பலம் எங்களுக்கே தெரியாமல் இருக்கிறது” என்று கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்பதையும் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
“எங்களுக்கு ஒரு சின்ன தோசை கொடுத்து, அதையே எல்லாரும் பங்கு போட்டுச் சாப்பிடுங்கள் என்று சொல்கிறார்கள்” என்ற அவரது கருத்து கூட்டணிக்குள் அதிருப்தி நிலவுவதை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. இதேவேளை, ஒரு பக்கம் அதிருப்தி தெரிவித்து, இன்னொரு பக்கம் கூட்டணியில் தொடரும் நிலைப்பாடு எடுத்திருப்பது அரசியல் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிக்கை திமுக வட்டாரத்தில் கடும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் நெருங்கும் சூழலில் இப்படியான கருத்துக்கள் வெளியாவதால், கூட்டணியின் ஒருமைப்பாடு பாதிக்கப்படும் என திமுக தரப்பில் கவலை தெரிவிக்கப்படுகிறது.
மேலும், காங்கிரஸ் மேலிடம் தமிழக தேர்தலை எவ்வாறு அணுகுகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ராகுல் காந்தியின் மௌனமும், இத்தகைய உட்கட்சிப் பேச்சுகளும் இணைந்து, கூட்டணிக்குள் உள்ள பதற்றத்தை வெளிக்கொண்டு வந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இந்த சர்ச்சை தேர்தல் முடிவுகளில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வாக்கு எண்ணிக்கை நாளில் தான் தெளிவாகும்.
English Summary
DMK gave them a small dosa Rahul Gandhi in an upset Praveen Chakravarthy speech creates a stir in the DMK alliance