தி.மு.க.வினரின் செல்போன்கள் ஒட்டு கேட்பு: தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்.! - Seithipunal
Seithipunal



தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இதற்கான பிரச்சாரம் நாளையுடன் முடிவடைகிறது. 

இந்நிலையில் தி.மு.கவினரின் செல்போன்களை ஒட்டு கேட்பதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி அளித்துள்ள புகாரில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தி.மு.கவினரின் முக்கிய பொறுப்பாளர்கள், வேட்பாளர்களின் செல்போன் உரையாடல்கள் ஓட்டு கேட்கப்படுகிறது. 

இந்த சட்டவிரோத செயலில் மத்திய அரசின் அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமானத்துறை போன்றவை மீது நாங்கள் சந்தேகிக்கிறோம். 

இந்த விவகாரம் குறித்து உடனடியாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Cell Phones Tapping issue


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->