நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பாம்பு பிடித்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்.! - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர் பாம்பு பிடித்த சம்பவம் வைரலாகியுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது.

இதில், ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சி அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மையம், விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றனர். தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் குன்னூரில் உள்ள வார்டு ஒன்றில் திமுக சார்பில் ராமசாமி என்பவர் போட்டியிடுகிறார். தேர்தலை முன்னிட்டு தெருத்தெருவாக ராமசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த தெருவை சேர்ந்த பெண் ஒருவரின் வீட்டிற்குள் பாம்பு புகுந்துள்ளது.

இதனை அறிந்த வேட்பாளர் ராமசாமி உடனடியாக அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து பாம்பை பிடித்துள்ளார். அதன் பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினரிடம் பாம்பை ஒப்படைத்துவிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK candidate who caught a snake and collected votes


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->