'சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடத்திட்டத்தின் மூலம் இந்தி திணிப்பு; ஜூன் 23-இல் ஆளுநர் மாளிகை எதிரே கண்டன ஆர்ப்பாட்டம்'; திமுக அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


வரும் ஜூன் 23-ஆம் தேதி, சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடத்திட்டத்தின் மூலம் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்தும் பல்கலைக்கழக அதிகாரத்தை பறிக்கும் விபிஎஸ்ஏ முறையே திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழக ஆளுநர் மாளிகை எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

புதுச்சேரி மாநில திமுக மாணவர் அணி நிர்வாகிகள் மற்றும் தொகுதி மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் திமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக மாணவர் அணிச் செயலாளர் வீரமணி கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி கூறியதாவது, "பிஎம்ஸ்ரீ விவகாரத்தில் தமிழக தவெக அரசு மவுனம் காக்கிறது. இதில் பரிசீலனை செய்வதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கல்வியை அடமானம் வைக்க தவெக அரசு துணிந்து விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக்கொள்கையை ஜூலையில் அமலாக்க திட்டமிட்டுள்ளனர். இதை அமலாக்க விடமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடத்திட்டத்தின் மூலம் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்தும் பல்கலைக்கழக அதிகாரத்தை பறிக்கும் விபிஎஸ்ஏ முறையே திரும்ப பெற வலியுறுத்தியும், வரும் ஜூன் 23-ஆம் தேதி தமிழக ஆளுநர் மாளிகை எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம் என்று அறிவித்துள்ளார்.

அத்துடன், முதலில் 09-ஆம் வகுப்பில் மூன்றாவது மொழிக்கு மதிப்பெண் இல்லை எனக்கூறிவிட்டு பத்தாம் வகுப்பில் மதிப்பெண் கொண்டுவருவார்கள் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK announces a protest demonstration opposite the Raj Bhavan on June 23 against the imposition of Hindi


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->