தொகுதி பங்கீடு : திமுக - விசிக இடையே 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் நாடு முழுவது அரசியல் கட்சியினர் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதில், இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியையும் தி.மு.க. ஒதுக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து திமுக மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் திமுக, நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அப்போது முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk and vck second time talk of constituency alottment for election


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->