திமுக கூட்டணி உடைகிறதா? பாலும், பழமும் கதைதான் மீண்டுமா? அப்படி ஒரு முடிவை எடுத்தாரா ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


வரும் சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ள தற்போது திமுக தலைமையில் உள்ள கூட்டணியை வைத்து வெற்றி பெறுவது இயலாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் எண்ணினாரோ என்னவோ தெரியவில்லை, அதிமுக தலைமையில் உள்ள கூட்டணி கட்சிகளை தன் பக்கம் இழுக்கும் பணியை செய்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்க திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகவும்,  அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

ஸ்டாலினின் இந்த முடிவால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இவரின் இந்த முடிவால், விடுதலை சிறுத்தை கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், இதனால் கூட்டணி உடையும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான அமைந்த  கூட்டணியே, வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளுமா என்பது போக போக தான் தெரியும். கடைசி நேரத்தில் கூட்டணி மாறும் கதைகள் கூட உண்டு என்பதால் அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதை மக்கள் அறிவர்.

முன்னதாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில் பாமக பலமாக உள்ளதால், அதனை சமாளிக்கும் விதமாக திமுக கூட்டணியில் விஜயகாந்தை இணைக்கும் முயற்சியில் திமுக தலைமை ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்பத்தியது குறிப்பிடத்தக்கது.

2011 சட்டமன்ற தேர்தலில் பழம் நழுவிவிட்டது, பாலில் விழு போகிறது என்று மறைந்த திமுக தலைவர் சொல்லியது போல ஆகாமல் இருந்தால் சரி 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk alliance info


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->