திமுக- அதிமுக கடும் போட்டி! தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி..விஜய் நிலமை..வெளியான புதிய கருத்து கணிப்பு!
DMK AIADMK fierce competition DMK is in power again in Tamil Nadu Vijay is in power New opinion poll released
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது. மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இந்த சூழலில் பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கணிப்புகள் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் சிஎன்என் நியூஸ் 18 வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின்படி, தமிழகத்தில் மீண்டும் திமுக கூட்டணி ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின் படி, திமுக கூட்டணி 113 முதல் 123 தொகுதிகள் வரை வெற்றி பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 117 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணி பெரும்பான்மையை நெருங்கும் நிலையில் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மறுபுறம் அதிமுக தலைமையிலான கூட்டணி 106 முதல் 116 தொகுதிகள் வரை வெல்லக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
அதே நேரத்தில் அரசியலுக்கு புதிய வரவாக இருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராகி வருகிறது. இருப்பினும் அந்த கட்சிக்கு 2 முதல் 8 தொகுதிகள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணிக்கு சுமார் 40.1 சதவீத வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 38.1 சதவீத வாக்குகளும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு 14.8 சதவீத வாக்குகளும் கிடைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த கணிப்புகள் தேர்தல் களத்தில் கடும் போட்டி நிலவுவதை காட்டினாலும், இறுதி முடிவு வாக்குப்பதிவுக்குப் பிறகு மே 4ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில்தான் தெளிவாகும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
English Summary
DMK AIADMK fierce competition DMK is in power again in Tamil Nadu Vijay is in power New opinion poll released