மீட்பு பணியில் ஈடுபட்ட, இந்திய ராணுவத்தினருக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்.. விஜயகாந்த்.!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா என்ற பகுதில் மலையேற்றம் சென்ற இளைஞர் பாபு, கால் தடுக்கி கீழே விழுந்து மலை இடுக்கில் சிக்கிக் கொண்டார். இரண்டு நாட்கள் தண்ணீர், உணவின்றி தவித்த பாபுவை ராணுவத்தினர் இரண்டு பிரிவுகளாக பிரிந்து நேற்று மீட்டனர். 

இந்நிலையில், பாபுவை மீட்ட ராணுவத்தினருக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா என்கிற மலைத்தொடரில், கடந்த திங்கட்கிழமையன்று மலையேற்றம் சென்ற 23 வயதான பாபு என்ற இளைஞர் மலை பிளவு ஒன்றில் சிக்கிக்கொண்டார்.

இதனையடுத்து, இரண்டு குழுக்களாக பிரிந்து, ராணுவத்தினர் அவரை மீட்கும் பணியில் நேற்று நள்ளிரவு முதல் தீவிரமாக ஈடுபட்டு, இளைஞர் பாபுவை பத்திரமாக மீட்டனர்.

மீட்பு பணியில் ஈடுபட்ட, இந்திய ராணுவத்தினருக்கு  நன்றிகளையும் & பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmdk vijayakanth thanks for indian army


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->