யாருடன் கூட்டணி..? தேமுதிகவின் அடுத்த பிளான் இதுதான்...! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
DMDK Premalatha Vijayakanth Election alliance 2026
தேமுதிகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். கட்சியின் அடுத்த முக்கிய இலக்கு மாநாடுதான் என்று அவர் தெரிவித்தார்.
மாநாட்டு அறிவிப்பு:
குருபூஜை: வரும் டிசம்பர் 28ஆம் தேதி விஜயகாந்தின் குருபூஜை தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
மாநாடு: ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டுக்காகக் கட்சி நிர்வாகிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். மாநாட்டில் கட்சியின் எதிர்கால நகர்வு குறித்த நல்லதொரு அறிவிப்பு வெளியிடப்படும்.
தேர்தலுக்குத் தயார்:
தேமுதிக, 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' மற்றும் 'மக்களைத் தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரை' என மூன்று கட்டப் பயணங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது.
அனைத்து இடங்களிலும் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு, தேமுதிக தேர்தலுக்கு முழுமையாகத் தயாராக உள்ளது. "தை பிறந்தால் வழி பிறக்கும். தமிழ்நாட்டின் அரசியலுக்கும் நிச்சயம் நல்லதொரு வழி பிறக்கும்" என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
கூட்டணி நிலைப்பாடு:
விஜயகாந்த் இருந்த காலத்திலிருந்தே அனைத்துக் கட்சிகளும் தேமுதிகவுக்குத் தோழமை கட்சிகள்தான்.
கூட்டணி குறித்து எந்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை. அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தைகள் தொடங்கவில்லை.
"எங்களுடைய இலக்கு 234 தொகுதிகளும் தான். உரிய நேரத்தில் நல்ல தகவலை அறிவிப்போம்" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
English Summary
DMDK Premalatha Vijayakanth Election alliance 2026