அதிமுகவில் இணைந்த தேமுதிக வேட்பாளர்.!! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். 

குறிப்பாக அதிமுக பாஜக‌ கூட்டணி முறிவுக்கு பிறகு அதிமுகவில் இணைவது அதிகரித்துள்ளது. 

இத்தகைய அரசியல் சூழலில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது. 

இந்நிலையில் கடந்து 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட பாக்கியராஜ் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தது அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

 

அதே போன்று தேனி வடக்கு ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர்வெற்றிவேல், செங்கல்பட்டு மாவட்ட அமமுக எம்.ஜி.ஆர் அணி பொருளாளர் மலர்க்கண்ணன், மதுரை மாநகர் மாவட்ட அமமுக வர்த்தக அணி செயலாளர் ஷேக் முகமது ஆகியோரும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில இணை செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dmdk 2021 uththankarai candidate joined in AIADMK


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->