விஜயகாந்த் உடல்நிலை; பிரேமலதா பொய்யான அறிக்கை, வெட்டவெளிச்சமாக்கி உண்மை அறிக்கையை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம் .! - Seithipunal
Seithipunal


தேமுதிக மற்றும் மியாட் மருத்துவமனை அடுத்தடுத்து வெளியிட்ட அறிக்கையால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

அறிகுறிகள் இல்லாமலேயே விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானது  

இந்த நிலையில், வழக்கமாக ஆறு மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனை விஜயகாந்த் சென்ற போது லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது என்றும் இருப்பினும் உடனடியாக அது சரி செய்யப்பட்டுவிட்டது என்றும் தேமுதிக தலைமை தெரிவித்தது. தற்போது விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார் என்றும் தேமுதிக தலைமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரிதிவ் மோகன்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 22ம் தேதி மேற்கொண்ட சோதனையில் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல் நிலை சீராக உள்ளது என்றும் கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்ப்பதாக அந்த மருத்துவ அறிக்கை கூறப்பட்டுள்ளது.

விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறி சரியாகிவிட்டதாக தேமுதிகவும், கொரோனா தொற்று இருப்பதாக மியாட் மருத்துவமனையும் அடுத்தடுத்து அறிக்கை வெளியானதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தேமுதிக தலைமை வெளியிட்ட அறிக்கை விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிற்கு தெரியாமல் வெளியாக வாய்ப்பில்லை என்பதால் ஏன் இப்படி பொய்யான அறிக்கையை வெளியிட வேண்டும் என்ற கேள்வியும் குழப்பமும் தேமுதிக தொண்டர்களிடையே எழுந்துள்ளது.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

difference information in vijakhanth health statement


கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
Seithipunal