#BigBreaking || தேவேந்திர குல வேளாளர்., சற்றுமுன் மத்திய அரசின் அதிரடி மசோதா.! 
                                    
                                    
                                   devdra kula velalar bill
 
                                 
                               
                                
                                      
                                            பட்டியல் இனத்தில் 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொது பெயரிட பாராளுமன்றத்தில் மத்திய அரசு மசோதா தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தில் உள்ள தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாரி ஆகிய சாதிகளை உள்ளடக்கி 'தேவேந்திரகுல வேளாளர்' என்று ஒரே பெயரில் பொதுப் பெயரிடக் கோரி பல்வேறு கோரிக்கைகள் தமிழக அரசுக்கு வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையினை பரிசிக்க கடந்த  4.3.2019 அன்று மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஹன்ஸ்ராஜ் வர்மாவை தலைவராகக் கொண்ட குழு ஒன்றை தமிழக அரசு அமைத்து. இக்குழு பரிந்துரையின்படி தேவேந்திரகுலத்தான், கடையன், பள்ளன்., உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என பொதுப் பெயரிட மாநில அரசின் பரிந்துரை மீது மத்திய அரசின் ஆணை பெற தமிழக அரசு அனுப்பியது.

இந்நிலையில், சற்றுமுன் பட்டியல் இனத்தில் 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொது பெயரிட பாராளுமன்றத்தில் மத்திய அரசு மசோதா தாக்கல் செய்துள்ளது.