கட்டுக்கட்டாக பணம் இருந்த மூட்டைகள்! ‘பெரும் சுறாக்கள்’?” உச்சநீதிமன்றத் தீா்ப்பை மறுபரிசீலிப்பது அவசியம் - துணை குடியரசு தலைவர் போர்க்கொடி!!
Depty Precedent SC
உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகள் வந்தால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் முன்அனுமதி கட்டாயம் என்ற 1991ஆம் ஆண்டு தீர்ப்பை மீண்டும் பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீடில் மார்ச் 14 அன்று ஏற்பட்ட தீவிபத்தில், கட்டுக்கட்டாக பணம் இருந்த மூட்டைகள் கண்டறியப்பட்டன. பின்னர் அந்தப் பணம் மாயமானது. இந்த விவகாரத்தில் விசாரணைக்குழுவாக இருந்த மூன்று நீதிபதிகள், உச்சநீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்தனர். அதில் பணம் இருந்தது உண்மை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து யஷ்வந்த் வர்மா அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டும், அவருக்கான நீதித்துறைப் பணிகள் ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில், “இவர் மீது வழக்குப் பதிவு ஏன் இல்லை? பணம் எங்கிருந்து வந்தது? அது யாருக்காக? யார் அந்த ‘பெரும் சுறாக்கள்’?” என கேள்விகள் எழுந்துள்ளன. பொது மக்கள் பதிலுக்காக காத்திருக்கிறார்கள் என்றார் துணைத்தலைவர்.
துறை ரீதியாக நடத்திய நீதிபதி குழுவின் விசாரணை, சட்ட ரீதியாக வழிகாட்டும் சக்தி இல்லாதது. அதனால் இவ்விபத்திற்கும், நாடு முழுக்க விரியும் தாக்கத்திற்கும் ஏற்றவாறு, தனி அனுமதித் தீர்ப்பை மறுபரிசீலிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.