அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் தகராறு..பாஜக-விசிகவினர் மோதல்.! - Seithipunal
Seithipunal


அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் பாஜக-விசிகவினர்  இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளையொட்டி நாடு முழுவதும் அவரது உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை சேலம் உள்ளிட்ட இடங்களில் பாஜக-விசிகவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜக மற்றும் விசிக கட்சித் தொண்டர்கள் ஒரே நேரத்தில் வந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் பாஜகவினரும், விசிகவினரும் ஒரு வரி வருவாய் கற்களை கொண்டு தாக்கி கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக கொடியை அகற்றி விட்டு விசிக கொடியை ஊன்ற முயன்றபோது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இரு கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகியது. இந்த மோதலில் பாஜகவை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Controversy over paying homage to Ambedkar statue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->