நள்ளிரவில் திடீர் ட்விஸ்ட்... ஒரு தொகுதிக்கு 5 பேர் போட்டி.. காங்கிரஸ் கட்சிக்குள் களேபரம்.!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைமை நேற்று நள்ளிரவில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் ஒதுக்கப்பட்ட ஒன்பது தொகுதிகளில் ஏழு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் இடம் பெற்றுள்ளன.

அதன்படி, திருவள்ளூர் (தனி) - சசிகாந்த் செந்தில்

கிருஷ்ணகிரி - கோபிநாத்

கரூர் - ஜோதிமணி

கடலூர் - விஷ்ணு பிரசாத்

சிவகங்கை - கார்த்திக் சிதம்பரம்

விருதுநகர் - மாணிக்கம் தாகூர்

கன்னியாகுமரி - விஜய் வசந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நெல்லை மற்றும் மயிலாடுதுறையில் போட்டியிடும் வேட்பாளர்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. மயிலாடுதுறை மற்றும் நெல்லை தொகுதிகளுக்கு கடும் போட்டி இருப்பதாலும் உட்கட்சி பூசல் அதிகரித்து காணப்படுவதாலும் இந்த இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

குறிப்பாக மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட ராமச்சந்திரன், திருநாவுக்கரசர், மகேந்திரன், பிரவீன் சக்கரவர்த்தி, மணிசங்கர் ஐயரின் மகள் ஆகியோரிடையே கடும் போட்டியின் நிலை வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress released 7 candidate list 2 constituency missing


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->