ராகுல் காந்தி உண்மையான இந்தியரா? இதெல்லாம் நீதிபதியின் வேலை இல்லை... பிரியங்கா காந்தி கண்டனம்!
Congress Rahul SC Priyanga
சீனா எல்லை அத்துமீறல் குறித்த விவகாரத்தில் இந்திய ராணுவம் குறித்த ராகுல் காந்தியின் அவதூறு பேச்சுக்கு எதிரான வழக்கின் விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது.
விசாரணையின் போது, நீதிபதிகள் எழுப்பிய கடுமையான கேள்விகள் ராகுல் மற்றும் காங்கிரசின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்த சூழலில், இன்று பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, “யார் உண்மையான இந்தியர் என்பதை தீர்மானிப்பது நீதிமன்றத்தின் பணி அல்ல.
என் சகோதரரான ராகுல் இந்திய ராணுவத்தை மிகுந்த மரியாதையுடன் பார்ப்பவர். அவர் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் பேசுவார். அவரது பேச்சில் தவறு இல்லை.
ஒரு எதிர்க்கட்சி தலைவராக அவருக்கு கேள்வி எழுப்பும் உரிமை இருக்கிறது. அதன்வழியாகவே அவர் சீன விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார். ஆனால், அவரது கருத்தை பிற்பெயர்த்தல் செய்து தவறாக விளக்கியிருக்கிறார்கள்,” என்றார்.
English Summary
Congress Rahul SC Priyanga