தேநீர் விற்பது போல் பிரதமர் மோடி : காங்கிரஸ் ராகினியின் நாயக் சர்ச்சை ஏஐ வீடியோ!
congress rahini nayak video modi pm bjp
காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான ராகினி நாயக், பிரதமர் நரேந்திர மோடியைத் தேநீர் விற்பவர் போல் சித்தரித்து உருவாக்கப்பட்ட ஒரு மலிவான ஏஐ (Artificial Intelligence) வீடியோவை வெளியிட்டது தேசிய அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
வீடியோவும் சர்ச்சை பின்னணியும்
பிரதமர் மோடி தனது இளம் வயதில் குஜராத்தின் வாத்நகர் ரயில் நிலையத்தில் தந்தைக்கு உதவியாகத் தேநீர் விற்றதாகப் பல மேடைகளில் கூறியிருக்கிறார். எளிமையான பின்னணியிலிருந்து வந்து, தேசப் பணியில் தீவிரமாக இருந்ததாலேயே பிரதமராக உயர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ராகினி நாயக் :
எதிர்க்கட்சிகள் பிரதமரை வைத்துப் பகடி செய்வது வழக்கம் என்றாலும், ராகினி நாயக் ஒருபடி மேலே சென்று, சர்வதேச அரங்கில் சிவப்புக் கம்பள வரவேற்புப் பின்னணியில் பிரதமர் மோடி தேநீர் விற்பது போல் சித்தரிக்கும் ஏஐ வீடியோவை உருவாக்கி வெளியிட்டுள்ளார்.
கண்டனம்: மருத்துவர் மற்றும் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் போன்ற பொறுப்பில் இருக்கும் ராகினி நாயக், நாட்டின் பிரதமருக்கு எதிராக இத்தகைய தனிநபர் விமர்சனத்தை, மிகவும் தரக்குறைவான சிந்தனையோடு முன்னெடுத்ததற்குப் பல தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
அரசியல் தாக்கம்
நாடாளுமன்றச் சூழல்: நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம், 'சஞ்சார் சாத்தி' செயலி சர்ச்சை, புதிய தொழிலாளர் சட்டம் போன்ற பல முக்கியப் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வரும் சூழலில், இந்த ஏஐ வீடியோ காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியை ஏற்படுத்துவதாக வந்து சேர்ந்துள்ளது.
English Summary
congress rahini nayak video modi pm bjp