உத்தர பிரதேசம் : காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்? அந்தர்பல்டி அடித்த பிரியங்கா காந்தி.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலை பொறுத்தவரை, தற்போது ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இடையில் காங்கிரஸ் கட்சியும் நாங்களும் களத்தில் இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்வதற்காக, பல்வேறு பிரச்சார யுத்திகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று, கங்கணம் கட்டி காங்கிரஸ் கட்சி களம் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கிறது. 

முக்கியமாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி, உத்தர பிரதேச சட்டமன்ற பொதுத்தேர்தலில் முழுவீச்சில் பணியாற்றி வருகிறார். 

மேலும், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, 

"உத்தரபிரதேசத்தில் என்னைத்தவிர காங்கிரஸ் தலைவர்களின் யாரையாவது நீங்கள் பார்த்துள்ளீர்களா? உத்தரபிரதேசத்தின் அணைத்து பகுதியிலும் என் முகத்தை பார்க்கலாம்" என்று தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை சூசகமாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், திடீர் திருப்பமாக பிரியங்கா காந்தி தனது முதலமைச்சர் வேட்பாளர் என்ற நிலையில் இருந்து பல்டி அடித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தி தெரிவிக்கையில்,

"அன்று செய்தியாளர் எழுப்பிய கேள்வியால் நான் ஒரு எரிச்சலில் அதுபோல் பதிலளித்தேன். என் முகத்தை தான் உத்தரபிரதேச மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று தான் கூறினேனே தவிர, நான் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை நான் எங்கும் சொல்லவில்லை.

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும். நான் இந்த தேர்தலில் போட்டியிட்டால் கூட, என்னை முதலமைச்சர் வேட்பாளராக கருத முடியாது" என்று பிரியங்கா காந்தி விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CONGRESS PRIYANGA GANDHI SAT ABOUT CM CANDIDATE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->