குமரி: காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு 3 மாதம் சிறை! 2014 தாக்குதல் சம்பவ வழக்கில் அதிரடி தீர்ப்பு!
Congress killiyur MLA case judgement
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், கடந்த 2014ஆம் ஆண்டு புறம்போக்கு நிலத்தை மீட்டெடுக்கச் சென்ற அரசு அதிகாரிகளை தடுக்கும் நோக்கில் அவர்களை தள்ளுமுள்ளு செய்து தடுக்க, தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது.
இந்த சம்பவத்துக்கான வழக்கு நீண்ட காலமாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் வாக்குமூலம், ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வழக்கை விசாரித்த நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றம், இன்று (ஏப்ரல் 21) தீர்ப்பளித்தது.
அதில், அரசு பணியில் உள்ள அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்ய முயன்றபோது அதனை சட்டவிரோதமாக தடுக்க முயற்சி செய்ததற்காக ராஜேஷ் குமார் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதன் பேரில் அவருக்கு 3 மாத சிறைத் தண்டனையும், ரூ.100 அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு, அரசுத் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளை தங்களின் கடமைகளை செய்யச் சுதந்திரமாக அனுமதிக்காத அரசியல்வாதிகளுக்கு தாக்கப்படம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#Congress #Nagercoil #TamilNadu
English Summary
Congress killiyur MLA case judgement