டாக்டர் இராமதாஸ் முன்னிலையில், பாமகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. தேவதாஸ்-க்கு, வழங்கப்பட்ட பதவி! - Seithipunal
Seithipunal


மருத்துவர் இராமதாஸ் முன்னிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. தேவதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியில் இன்று தன்னை இணைத்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து பா.ம.க. தலைமை நிலையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொருளாளரும், தொழிலதிபருமான சேலம் இராமசாமி உடையார் அவர்களின் புதல்வரும்,  சேலம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான  தேவதாஸ்  அவர்கள், இன்று தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார்.

பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்த தேவதாஸ் அவர்கள் கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதற்கான கடிதத்தை மருத்துவர் இராமதாஸ் அவர்களிடமிருந்து  தேவதாஸ் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வின் போது  பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும்,  வன்னியர் சங்கத்தின் செயலாளருமான கார்த்தி உடனிருந்தார்."

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress Ex MP Devadoss Joint to PMK


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->