பெரும் சர்ச்சை.. இந்துக்களுக்கு எதிராக பேசினால் என்கவுண்டர்.. பாஜக எம்எல்ஏ மீது காங்கிரஸ் பரபரப்பு புகார்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில பொது தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக தரப்பில் கட்சியின் தேசிய தலைவர் நட்டா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோன்று காங்கிரஸ் கட்சியின் தலைப்பில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் உத்தர பிரதேசம் போன்று என்கவுண்டர் ஆட்சி நடைபெறும் என பாஜக எம்எல்ஏ பிரச்சார மேடையில் பேசி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கர்நாடக மாநிலம் விஜயபுராவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ பசங்கவுடா பாட்டீல் யத்னால் பேசியதாவது "நீங்கள் இந்தியா அல்லது இந்துக்களுக்கு எதிராக பேசினால் அப்போது சுட்டுக்கொல்லப்படுவீர்கள். உத்திரபிரதேசத்தில் போலீஸ் காவலில் இருந்தபோது ​​3 மர்ம நபர்களால் அதிக் அஹ்மத் சுட்டுக் கொன்றது போன்று நடுரோட்டில் என்கவுண்டர் செய்யப்படுவீர்கள்" என சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

பாஜக எம்எல்ஏவின் இத்தகைய சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே இவர் சோனியா காந்தி பற்றி அவதூறாக பேசியதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பாஜக எம்எல்ஏ பசங்கவுடா பாட்டீல் பாஜக ஆட்சி அமைந்தால் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்படுவார்கள் என பேசியதற்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress complaint on BJP MLA saying if you speak against Hindus you will encounter


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->