ஒகேனக்கல்லில் அணை கட்டி கர்நாடகத்தை திணறடிக்க முடியுமா..? அதிமுக எம்.பி சூசகமாக வெளியிட்ட அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக எம்.பி தம்பிதுரை பல்வேறு கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வருகிறார்.

அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுவையும் பெற்று வருகிறார். அந்த வகையில், கரூர் மாவட்டம் கடவூர் பகுதிக்கு சென்று அப்பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கஜா புயல் பாதிப்புக்கு 15 ஆயிரம் கோடி நிதி கேட்டோம். ஆனால் வெறும் 350 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. முழு தொகையும் வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்ட தொடரில் வலியுறுத்த போகிறேன்.

https://img.seithipunal.com/large/large_dadad-21075.jpg

கர்நாடகத்தில் காங்கிரஸ்-பாஜக இடையே மோதல் நிலவி வருவதன் காரணமாக, காவிரியில் மேகத்தட்டு பகுதியில் அணை கட்டுவதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது.

ஒருநாள் பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் மாநில கட்சிகளாக மாறும். இப்போது அணை எங்கு கட்ட வேண்டும் என்ற கேள்வியை என்னிடம் முன்வைத்தால், ஒகேனக்கல்லில் தான் என்று கூறுவேன்.

மேகத்தட்டு அணைக்கு பதிலாக அங்கு அணை கட்டினால் மின்சாரம் தயாரிக்கலாம். பெங்களூரு குடிநீர் தேவைக்கு கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நீர் எடுத்துக்கொள்ளலாம்.

https://img.seithipunal.com/large/large_images-54-21155.jpg

மேகத்தட்டுவா..? ஒகேனக்கல்லா..? என்று பார்த்தால் அணை கட்ட ஒகேனக்கல் தான் சிறந்த தேர்வாக அமைகிறது. அண்டை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்டக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. அதனை உணர்ந்து கர்நாடக அரசு செயல்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு கர்நாடக அரசின் முயற்சிகளை தடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress and bjp will turn into state parties, says Thambidurai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->