பாமக தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், சற்றுமுன் பிரதமருக்கும் கடிதம் எழுதிய முதல்வர் முக ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக செய்தி வெளியாகியது.

மேகதாது அணை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அது குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விவாதிப்பது ஒருதலை பட்சமானதும், தமிழகத்திற்கு துரோகம் என்றும் பாமக உள்ளிட்ட அரசியல் காட்சிகள் தங்களது கண்டதை தெரிவித்தன.

மேலும், மேகதாது அணை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்படக் கூடாது என்றும், வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் இருந்து மேகதாது விவகாரம் நீக்கப்பட வேண்டும் குரல் வலுத்து வருகிறது.

இந்நிலையில், மேகதாது அணை தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cm Stalin letter to pm modi For megathathu Issue june


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->