நெருங்கும் மக்களவை தேர்தல்: தர்மபுரியில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

அதேபோல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் போட்டியிடும் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்கள் பங்கேற்று பேசி வருகிறார். 

அதன்படி தர்மபுரி, தடங்கம் கிராமத்தில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் நாளை மாலை 6 மணி அளவில் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்வதற்காக நாளை சேலம் விமான நிலையத்திலிருந்து கார் மூலம் தர்மபுரி செல்கிறார். 

அதன் பிறகு தர்மபுரி போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் வழக்கறிஞர் மணி மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். 

இதற்காக தர்மபுரியில் மேடை, பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் அமர்வதற்கான தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்த கூட்டத்தில் சுமார் 50,000 பேர் அமரும் விதமாக இருக்கைவசதி, ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தர்மபுரி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin campaign in Dharmapuri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->