அந்த இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களின் அனைத்து கட்டணங்களையும் தமிழக அரசே ஏற்கும்.!  - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

இன்று 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அதற்கான சான்றிதழ் வழங்கினார். அப்போது பேசிய முக ஸ்டாலின், 

இந்த 7.5 இட ஒதுக்கீட்டின் மூலம் பொறியியல் படிப்பில் சுமார் பத்தாயிரம் அரசு பள்ளி மாணவர்கள்  பயனடைவார்கள். இந்த மாணவர்களின் கல்வி கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வு கட்டணம் என அனைத்தையும் அரசே ஏற்கும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த இட ஒதுக்கீட்டில் கால்நடை, சட்டம், வேளாண்மை படிப்புகள் மூலம்  300 மாணவர்கள் பயன் பெறுவர் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயர்கல்வி, தொழில்கல்வி ஆராய்ச்சிகளின் பொற்காலமாக இந்த ஆட்சி மாற வேண்டும் என்றும் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM STALIN ANNOUNCE FOR GOVT SCHOOL STUDENT HIGHER STUDYS FEES


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!
Seithipunal