பள்ளி, கல்லூரி, தியேட்டர் என தமிழகம் முழுவதும் விடுமுறை! தீவிரமாக களமிறங்கிய முதல்வர் பழனிசாமி!  - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம்ஆனது, இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஒவ்வொரு மாநிலங்களாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கேரளாவில் மகாராஷ்டிராவிலும் அதிகபடியான நபர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  துரித படுத்தப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தற்போது எடுக்க முன்வந்துள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டமானது இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு தற்போது வெளியான அறிக்கையில், தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களை  அங்கன்வாடி மையங்கள் என அனைத்தையும்  மார்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகள் வணிக வளாகங்கள் கேளிக்கை பூங்காக்களும் கேளிக்கை விடுதிகளும் 31ம் தேதி வரை மூடி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதேபோல திருமணங்களில் ஏராளமானோர் கூடுவதை தவிர்க்க வேண்டுமெனவும் குறைந்தளவு மக்களே பங்கேற்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது வரை உறுதி செய்யப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்த வேண்டுமெனவும் புதிதாக நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் பார்களையும் 31ம் தேதி வரை மூடி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்

அதே சமயம் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த நிறுவனங்கள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  திருவிழாக்கள் மற்றும் துக்க நிகழ்வுகளிலும் மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  ஏற்கனவே தமிழகத்தில் எல்லையோர மாவட்டங்களில் கேஜி முதல் ஐந்து ஆவது வரை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும்மழலையர் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது

10 மற்றும் +2 வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி பொது தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Edappadi palanidsamy announcement for corona prevention


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->