மொத்தமாக சிக்கிய கும்பல்., கைது செய்த போலீஸ்., வைரல் ஆகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


மணல் கொள்ளையை தடுக்க வந்த போலீசாரை தாக்க முயன்ற பெண்களை, போலீசார் கைது செய்து உட்கார வைக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

பீகார் மாநிலத்தில் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி மதுவிலக்கை அம்மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. அதேபோல் மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாக்க, மாநில அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக மணல் கொள்ளையை தடுப்பதற்காக, ஆளில்லா விமானங்கள் மூலம் சட்ட விரோத சுரங்கங்கள் உள்ளதா என்பதை, தொடர்ந்து அம்மாநில போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் மணல் சுரங்கங்களை முறைப்படுத்தி, அவற்றை ஏலம் விடவும் பீகார் மாநில அரசு முடிவு செய்து. அதன்படி, கயா மாவட்டத்தில் உள்ள மணல் சுரங்கங்கள் மற்றும் குவாரிகளை ஏலம் விட அரசு அதிகாரிகள் சென்றனர். அப்போது சட்ட விரோத மணல் குவாரிகளில் ஈடுபட்டு வரும் அந்த பகுதி கிராம மக்கள், இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது கிராம மக்கள் திடீர் என போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக ,கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தது.

அப்போது ஆண்கள் மற்றும் பெண்கள் என பலரை கைது செய்த போலீசார், பெண்களை விலங்கிட்டு வரிசையாக உட்கார வைத்து இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Clash With police and Women In Bihar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->