எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ள முதல்வர் விஜய் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின்; என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா..? - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, 'தல' மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் விஜய் தனது வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

''உங்கள் பெயரை எதிரொலிக்கும் ஒவ்வொரு ஆரவாரமான விசில் சத்தம் முதல், நீங்கள் உத்வேகம் அளித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற இதயங்கள் வரை, உங்களது இந்த வரலாற்றுப் பயணம் தமிழ்நாட்டின் விளையாட்டு உணர்வோடு பிரிக்க முடியாத ஓர் அங்கமாகக் கலந்துள்ளது.

நமது 'கேப்டன் கூல்' மகேந்திர சிங் தோனிக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். கிரிக்கெட் உலகில் நீங்கள் படைத்த அசாத்திய சாதனைகளும், அமைதியான தலைமைப் பண்பும், எளிமையான குணமும் தலைமுறைகளைக் கடந்து முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகின்றன.

நீங்கள் நல்ல உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும், தொடர் வெற்றிகளையும் பெற்று, பல்லாண்டுகள் சிறப்புடன் வாழ உளமார வாழ்த்துகிறோம். உங்களுக்கான விசில் ஒலிகள் இன்னும் ஓங்கி ஒலிக்கட்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வரை தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;

'கேப்டன் கூல்' எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

''களத்திலோ அல்லது களத்திற்கு வெளியிலோ, உங்கள் நிதானம்,  தலைமைத்துவம் மற்றும் என்றும் குறையாத ஈர்ப்புத்திறன் ஆகியவை லட்சக்கணக்கானோருக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன. உங்களை மீண்டும் களத்தில் காணும் ஆவல் எப்போதும் போலவே இப்போதும் வலுவாக உள்ளது. 

உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் இன்னும் பல ஆண்டுகள் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Vijay has wished MS Dhoni a happy birthday


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->