மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..!
Chief Minister Stalin statement that he will file a case against the central government in the Supreme Court
தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தமிழாகி அரசு குற்றம் சுமத்தியுள்ளது. இந்நிலையில் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
தமிழா பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது:- அனைவரின் உயர்வு,மேன்மைக்கு அடிப்படை கல்வி தான். ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சி வரிசையோ என்றைக்கும் கொள்கையை விட்டுத்தர மாட்டோம். தமிழகத்திற்கான கொள்கைக்கு குரல் கொடுப்போம். என்று தெரிவித்தார்.

அத்துடன், தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கிய போது, கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கை இட ஒதுக்கீட்டை சிதைத்துவிடும் என்றும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், அதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், பாடத்திட்டம் வகுப்பதிலும், கற்க வேண்டிய மொழியை முடிவு செய்வதிலும் மாநில அரசுகளுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என விமர்ச்சித்தார்.
அத்துடன், மாநிலபட்டியலுக்கு மாற்றவில்லை என்றால், பலருக்கும் கல்வி எட்டாக்கனியாக மாறிவிடும் என்றும், தடுப்புச்சுவர்களை எழுப்பி பலரையும் பாதி தூரத்தில் நிறுத்தி கல்விச் சாலைக்கு வெளியே நிறுத்திவிடுகின்றனர் என தெரிவித்தார்.

மேலும், மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை என்பதால் மத்திய அரசு தர வேண்டிய நிதியை மறுப்பது அனைவருக்கும் தெரியும் என்றும், பாராளுமன்ற குழு பரிந்துரை செய்த நிதி தான் அது என்று தெரிவித்த அவர், குழந்தைகள், ஆசிரியர்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் தமிழக அரசு வழக்கு தொடர போகிறது என்றும் இந்த வழக்கிலும் வெற்றி பெறுவோம் என நம்புவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
English Summary
Chief Minister Stalin statement that he will file a case against the central government in the Supreme Court