சிறப்பு! முனைவர் பட்டம் பெற்ற திருநங்கை Dr. N.ஜென்சிக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்...!
Chief Minister congratulated Dr N Jency a transgender woman who received a doctorate
சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் ஆங்கிலத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் 'திருநங்கை' Dr.N.ஜென்சி அவர்கள், அக்கல்லூரியில் ஆங்கில உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
அதிர் அவர் குறிப்பிட்தாதாவது,"வாழ்த்துகள் Dr. ஜென்சி!
உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக்கரை சேரட்டும்!
தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும் பேராற்றலால் வெல்லட்டும்! என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற ஊக்கத்தால் இன்னும் இருட்டில் உள்ளவர்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Chief Minister congratulated Dr N Jency a transgender woman who received a doctorate