எந்த சூழ்நிலையிலும் முறைகேட்டை அனுமதிக்க முடியாது - அரசுக்கு எச்சரிக்கை விடுத்த சென்னை உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


அரசு பணிகளில் எந்த சூழ்நிலையிலும் முறைகேட்டை அனுமதிக்க முடியாது என்று, உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசு பணி நியமனங்களின் போது தேர்வு விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், உத்தரவை மீறுவது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் 10,000பேரை சட்டவிரோதமாக பணியமர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

 

மேலும் ஒரு அண்மைய செய்தி : பெண்ணிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி!

சென்னை உயர்நீதிமன்றத்தில் சொத்து பாகப்பிரிவினை வழக்கின் குறுக்கு விசாரணையின் போது, பெண் மனுதாரரிடம் குறுக்கு விசாரணை செய்த வழக்கறிஞர் பண்பற்ற முறையில் கேள்வி எழுப்பிய விவகாரம் சர்ச்சையை எழுப்பியது.

இதுகுறித்த மேல்முறையீட்டு மனு தீர்ப்பின் போது நீதிபதி தெரிவிக்கையில், "நீதிமன்றத்தில் மனுதாரர் அவமதிக்கப்பட்டதால் மன்னிப்பு கோருகிறோம். மனுதாரர்களை அவமதிக்கவோ, காயப்படுத்தவோ குறுக்கு விசாரணை இல்லை. தங்களது உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடும் பெண்களின் நடத்தையை படுகொலை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கக்கூடாது" என்று தெரிவித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Hc Warn to Govt For Govt JobS


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->