#தமிழகம் | ஏமாற்றிய அரசு., பிச்சை எடுத்த அரசு ஊழியர் -  அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


மதுரை அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் குடும்ப வறுமையில் சிக்கி, யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் கோபால். இவர் மதுரைப் பகுதியில் யாசகம் பெற்று தனது வாழ்வை நடத்தி வந்துள்ளார். பின்னர் ஒரு சில நல்ல உள்ளங்களின் உதவியுடன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை கோபால் தாக்கல் செய்தார்.

அவரின் அந்த மனுவில், "தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த நான், அரசு வேளாண் உதவி அதிகாரியாக பணியாற்றி, கடந்த 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன். பணி ஓய்வு பெற்ற சமயத்தில் கூட்டுறவு சங்கத்தில் கடன் நிலுவையில் இருந்த காரணத்தினால், எனக்கு ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனால் எனது குடும்பம் வறுமையில் சிக்கி தவித்தது. வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாத எனது மகன் தற்கொலை செய்து கொண்டான். இதனால் விரத்தி அடைந்து வீட்டை விட்டு வெளியேறிய நான், யாசகம் பெற்று எனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய இந்த சூழ்நிலையை கருதி எனக்கு சேர வேண்டிய ஓய்வூதிய பலன்களை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்துருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, மனுதாரருக்கு சேர வேண்டிய ஓய்வு தொகையில் கடன் தொகையை கழித்து விட்டு, மீதி தொகையை உரிய வட்டியுடன் ஆறு வாரத்திற்குள் அரசு அதிகாரிகள் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CHENNAI HC DIVITION ORDER TO OLD GOVT STAFF


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->