ஏற்பட்ட துரதிஷ்டமான மரணம்! அதிர்ச்சி அளிப்பதாக ராமதாஸ் இரங்கல்! - Seithipunal
Seithipunal


கொரோனா ஊரடங்கு காரணமாக மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து  நாமக்கல் நகருக்கு  நண்பர்களுடன் நடந்தே வந்த லோகேஷ் பாலசுப்ரமணியன் என்ற 21 வயது இளைஞர் தெலுங்கானாவில் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். 

மேலும் இது தொடர்பாக வெளிமாநிலத்தில் உள்ள தமிழக தொழிலாளர்களுக்கு அவர் வேண்டுகோள் ஒன்றினை வைத்துள்ளார். அதில், "கொரோனா ஊரடங்கு காலத்தில் வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் அங்கேயே இருப்பது தான் பாதுகாப்பானது. அவர்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உணவு, தங்குமிட வசதிகளை செய்து கொடுத்து பாதுகாப்புடன் வாழ வகை செய்ய வேண்டும்!
                    
மராட்டிய மாநிலத்தில் தவிக்கும் 600-க்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்கள் சொந்த ஊர் திரும்ப ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். மராட்டிய அரசுடன் பேசி அங்குள்ள தமிழ் இளைஞர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை உறுதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!" என பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy died while return to tamilnadu by walk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->