திடீர் திருப்பம்: ஆளும் கட்சியில் இருந்து விலகி பாஜகவுக்கு செல்ல இருந்த எம்.எல்.ஏ.,வை இழுத்து பிடித்த அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழகம் மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க தமிழகத்தில் அதிமுகவும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருகிறது.

தேர்தல் நாள் நெருங்க நெருங்க மேற்குவங்கத்தில் நடக்கும் அரசியல் காட்சிகள் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆளும் கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்எல்ஏக்கள் எம்பிக்கள் விலகி பாஜகவில் இணையும் காட்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து உள்ளனர். இதற்கிடையே அம்மாநில பங்குரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துஷார் பாபு அண்மையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருந்தார். அவர் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்த்த நிலையில், மறுபடியும் அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

இந்த இணைப்பு குறித்து பேசிய மேற்கு வங்காள அமைச்சர், "தேர்தலுக்கு முன்னதாகவே வரும் மே மாதம் முதல் வாரத்திற்குள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஆறு முதல் ஏழு எம்எல்ஏக்கள் இணைவார்கள். எங்கள் கட்சியில் இருந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைய வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் விலகிய துஷார் பாபு மீண்டும் எங்கள் கட்சியில் இணைந்துள்ளார். எங்கள் கட்சிக்கு ஒரு நல்ல வலுவை அளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP VS TMC


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->