அண்ணாமலைக்கு ஷாக்... அதிமுகவுக்கு தாவிய முக்கிய புள்ளி.!! குஷியில் ஈபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் மூத்த தலித் தலைவரும், தமிழக பாஜகவின் பட்டியலின அணி மாநில தலைவருமான தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்துள்ளார்.

எதிர் வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிராக தடா பெரியசாமி போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயரும், தற்போதைய பாஜக நிர்வாகியுமான கார்த்தியாயினி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனால் அதிருப்தியில் இருந்த தடா பெரியசாமி தற்போது பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னை பசுமை வழி சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்திற்கு சென்ற தடா பெரியசாமி, எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.  மக்களவை தேர்தல் நேரத்தில் தடா பெரியசாமி பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து இருப்பது அண்ணாமலையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP tada periyasami joined in AIADMK


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->